- Back to Home »
- அதீதத்தின் ருசி , கவிதை , மனுஷய புத்திரன் »
- அதீதத்தின் ருசி
Sunday, November 11, 2012
புகார்கள்
ஒன்றுமில்லை
எல்லாமே
சிறிதளவு அளிக்கப்பட்டிருக்கின்றன
கொஞ்சம் விளையாட்டு
கொஞ்சம் அரவரணைப்பு
கொஞ்சம் படிப்பு
கொஞ்சம் ஆரோக்கியம்
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் புகழ்
கொஞ்சம் காதல்கள்
கொஞ்சம் பயணம்
கொஞ்சம் புணர்ச்சிகள்
கொஞ்சம் வாதைகள்
கொஞ்சம் திறமைகள்
கொஞ்சம் அவமதிப்புகள்
கொஞ்சம் நண்பர்கள்
கொஞ்சம் குழைந்தைமை
கொஞ்சம் கேளிக்கைகள்
கொஞ்சம் புறக்கணிப்புகள்
கொஞ்சம் கருணைகள்
கடவுள்
என் முறை வரும்போது மட்டும்
கொஞ்சமாகவே தன் கைகளைத் திறக்கிறார்
என்னை முத்தமிடும்போது மட்டும்
பாதியே அணைத்துக்கொள்கிறார்
எனக்குத் தேவைப்படுவதும்
அவ்வளவே
என்றபோதும்
எப்போதாவது
ஏதேனும் ஒன்று
நிறைய கிடைத்தால்
நல்லதுதான்
அதீதத்தை எப்படி
எதி்ர்கொள்வது என்று
சோதிப்பதற்காக
அதன் ரத்த ருசியை
ஒரு கணம் அறிவதற்காக
#மனுஷய புத்திரனின் அதீதத்தின் ருசியில் இருந்து